மாலை போட்டு, இருமுடி கட்டி, சபரிமலை கோவிலுக்குள் மாலை போடாத சில தொண்டர்களுடன் செல்ல முயன்ற, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கேரள காவல்துறையினர் பம்பை அருகே தடுத்து நிறுத்தி, காரில் செல்ல அனுமதி கிடையாது; தாங்கள் இங்கு அரசு முறை பயணமாக வரவில்லை; தனிப்பட்ட முறையில் ஒரு பக்தராகதான் தான் வந்துள்ளீர்கள். எனவே, மத்திய அமைச்சருக்கான எந்த தனிச் சலுகையும் இங்கு வழங்க இயலாது. யாராக இருந்தாலும் பேருந்தில் மட்டும்தான் செல்ல முடியும் என்று கூறினர்.
இதனால் அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகளிடம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குவாதம் செய்தார். ஆனால், கேரள காவல்துறை அதிகாரிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.
இதனால் வேறு வழியின்றி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பக்தர்களோடு பக்தராக, கேரள அரசு பேருந்தில் ஏறி, சபரிமலை நோக்கி சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
-எஸ்.சதிஸ் சர்மா.
என்ன ப்பா இப்படி பேசலாமா… அவர் யாரு… திரு. ர் அவர்களே.. தாங்கள் ஒரு பக்தராக சென்றுள்ளீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்…..
Sabarimalayil Keralaarasangam theyvaiyillada prachanaikalai Baktharkalukku koduthuvarugiradu idu oru thavarana saigai oru Central Minister sollum darma niyayangalai ketga Police thayaraga illai Manidaurimai comission idil thalai yittu nallaoru therrppu tharavendum. Sattathai madikkum oru nalla mandthri. Kerala Governar yenna saigirar. Idu vishayamaga avar nadavadikkai yedukkalam Pinarayi migavum thavaru saigirar avarai attivaippadu Anniya sakthi. Avarukku idu Last warning President of India will take neceacity steps to Worship LardIyyapa peacefully.