திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள, திண்டுக்கல் பிரிவு சாலை அருகே, தேசிய நெடுஞ்சாலை துறையின் பாலத்திற்கு கீழே நீண்ட நாட்களாக சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இந்நிலையில், இதனைக் கண்ட இன்று அங்கு பணியில் இருந்த திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் S.V.முத்துஅருணகிரி மற்றும் போக்குவரத்து தலைமை காவலர் G.இராமன் ஆகியோர், கற்கள் மற்றும் கிரஷர் கலவைகளை சேகரித்து, சாலையில் இருந்த குழிகளை மூடி சரி செய்தனர்.
போக்குவரத்து காவலர்களின் இச்செயலை கண்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆச்சர்யமடைந்தனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com