தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றது. அது போல சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள இளைஞர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த மூன்று நாட்களாக ஏற்காடு மக்களிடமும், வணிக நிறுவனங்களிலும் நிவாரண பொருட்களை சேகரித்தனர்.
ரூ. 8 இலட்சம் மதிப்பில், 5 டன் அரிசி,பருப்பு, பிஸ்கட், துணி, போர்வை, காய்கறிகள், உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் லாரி மூலம் இன்று பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும், மின் தேவைக்காக ஜெனரேட்டர் மற்றும் மரஅறுவை இயந்திரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த இளைஞர் குழுவினர் பொருட்களை வினியோக செய்து, அப்பகுதிகளில் மீட்பு பணிகளிலும் ஈடுபட உள்ளனர்.
-நவீன்குமார்.