வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, திருச்சி, ஸ்ரீரங்கம், ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், “நம்மாழ்வார் மோட்சம்” நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது.
தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் என்பதால்,
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசையாழ்வார்
- நம்மாழ்வார்
- மதுரகவி ஆழ்வார்
- குலசேகர ஆழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- தொண்டரடிப்பொடியாழ்வார்
- திருப்பாணாழ்வார்
- திருமங்கையாழ்வார்
ஆகியோர்கள் முன்னிலையில், ஸ்ரீரங்கம் வெள்ளைக் கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் காட்சித்தந்த ஸ்ரீ அரங்கநாதருக்கு, ஆழ்வார்கள் பாடலை பக்திப் பரவசத்துடன் பாடினார்கள். இந்நிகழ்ச்சி இன்று முற்பகல் 11.10 மணிவரை நடைப்பெற்றது. இதில் ஏராளமானப் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Useful news sir