தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தச் சொல்லி உயர்நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும், இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்கள் இல்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ஜனவரி 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது ஆச்சர்யமாக மட்டுமல்ல; அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் நிறைவடைய இருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் மனதிலும் எழுந்துள்ள இந்நிலையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்து இருப்பது, இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தலாமே? தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் 2 ஆண்டு காலம் ஒத்திவைத்த இந்திய தேர்தல் ஆணையம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? யாரை ஆழம் பார்பதற்கு இந்த இடைத்தேர்தல்?
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Ippo yenna avasaram yendrupuriyavillai, CBI panel periya ootai, Election commission Migaperiya ootai mothathil Anaithu Individual Administrationil Arasiyal thalaiyiduvadu Congress analum BJP analum onnudan.