கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் சேதமடைந்த இலங்கை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை, இலங்கையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேரில் பார்வையிட்டார்.
தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு, கிழக்கு மாகாண கட்டளை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்த துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை உள்ளிட்ட திருத்தந்தைகளுக்கும், பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
-என்.வசந்த ராகவன்.