திருச்சி கீழமுல்லக்குடி அருகே காந்திபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைப்பெற்றது!

திருச்சி – கல்லணை சாலையில் சர்க்கார்பாளையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காந்திபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் “ஆடம்பர தேர் பவனி” நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைப்பெற்றது.

தேர் பவனி தொடங்குவதற்கு முன்பு கீழமுல்லக்குடி பங்குதந்தை தனிஸ்லாஸ் தலைமையில் ‘ஆடம்பர திருப்பலி’ நடைப்பெற்றது. விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை காந்திபுரம் கிராம பொதுமக்களும் , அன்னை இளைஞர் நற்பணி மன்றத்தினரும் சிறப்பாக செய்து இருந்தனர்.

-துரை திரவியம்

Leave a Reply