கால்வாய்களை சுத்தம் செய்த இலங்கை கடற்படையினர்!

இலங்கையில் மழை அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையடுத்து,  நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், இலங்கை கடற்படையினர் மும்முரமாக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி  கொழும்பு பகுதியில் கால்வாய்களில் உள்ள  வெங்காய தாமரைகள், நீர்நிலைகளை தடுத்திருந்த  செடி, கொடிகள், புதர்கள் மற்றும் பிற குப்பைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply