இலங்கை கடற்படையினர் முன்னெடுத்து வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ‘பச்சை நீல பசுமைப் போர்’!

இலங்கையில் கடலோர சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ‘பச்சை நீல பசுமைப் போர்’  – என்ற திட்டம், இலங்கை கடற்படையினரால் திருகோணமலை கடற்படை தளத்தில் இன்று (ஜூன் 21) துவக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடலோரப் பகுதி மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது மூன்று அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

  1. கடல் மற்றும் நிலம் மாசுபடுவது, உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கும், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலவாழ்வுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
  1. அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் கடல் வளங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் சுரண்டுவது, கடல் உயிரினங்களையும், தாவரங்களையும் சேதப்படுத்துதல். 
  1. சாலைகள் அகலப்படுத்தப்படுவதாலும், நகரமயமாக்கல் காரணமாக கட்டுமானப் பணிகளாலும், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகப்பெரிய பாதிப்பு உருவாகி வருகிறது . 

மேற்காணும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ‘பச்சை நீல பசுமைப் போர்’ – என்ற திட்டத்தை இலங்கை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply