பள்ளி மாணவர்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்!- இலங்கை கடற்படையின் அசத்தல் திட்டம்.

உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுபாடு தலைவிரித்து ஆடுகிறது. பாதுகாப்பான குடிநீர் இலலாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு குடிநீர் விற்பனை செய்யும் நிறுவன முதலாளிகள் தரமற்ற தண்ணீரை பாட்டில் மற்றும் கேன்களில் அடைத்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.

தரமற்ற தண்ணீரை குடிப்பவர்களுக்கு சிறுநீரக நோய்கள் உண்டாகுகிறது. இதனால் மக்கள் பணத்திற்கு, பணத்தையும் இழந்து, சிறுநீரக வியாதிகளை பரிசாக பெற்றுகொள்கின்றனர்.

இந்தியா உள்பட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மேற்காணும் ஆபத்துக்களில் இருந்து மக்களையும், அடுத்த தலைமுறைகளையும்  காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இலங்கை கடற்படையின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதுகாப்பான குடிநீர் வழங்க இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவக்குழு, சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள இடங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து வருகிறது.

குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், தண்ணீரை விலைக்கு விற்கும் நிறுவனங்கள் அனைத்தையும் போர்கால அடிப்படையில் அரசுடைமை ஆக்க வேண்டும். மேலும், மதுபான மற்றும் குளிர்பான ஆலைகள் அனைத்தையும் உடனே இழுத்து மூடவேண்டும்.

மேலும், மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில், ஆறு, ஏரி, கிணறு, குளம், குட்டை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தையும் தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

அப்போதுதான்  தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

 

 

 

Leave a Reply