திருகோணமலை நாயரு கடல் பகுதியில் உரிய அனுமதி அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 16 பேரை 2019 ஜூலை 04 ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை, குச்சவெலி மற்றும் எரக்கண்டி பகுதிகளில் வசிக்கின்ற 20 முதல் 64 வயது வரையானவர்களாக அடையாளம் காணப்பட்;டுள்ளது.
அவர்களிடமிருந்து 07 மீன்பிடி படகுகள், 07 மோட்டார்கள் மற்றும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் 13 மீன்பிடி வலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைதீவு மீன்வளத்துறை துணை உதவி இயக்குனரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.