எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 வயது சிறுவன் உள்பட 6 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது!

சர்வதேச கடல் எல்லையிலிருந்து சுமார் 03 கடல் மைல்கள் தாண்டி, இலங்கை கடல் பகுதியில் எல்லை மீறி சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 12 வயது சிறுவன் உள்பட 6 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் ஜூலை 11  ஆம் தேதி  கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஒரு படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர், யாழ்பாண மீன் வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply