வேலூர் மக்களவைக்கு நடக்க இருந்த தேர்தல் முன்பு யாரால், எதனால் ரத்து செய்யப்பட்டதோ? அதே வேட்பாளர்களை இரு கட்சிகளுமே இப்போதும் களமிறக்கியுள்ளது. இதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அனுமதித்துள்ளது. அப்படியானால் இப்போது மட்டும் எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும்?
இந்நிலையில், வெற்றிக்கான விலை எதுவாக இருந்தாலும் சரி, வேலூர் மக்களவைத் தொகுதியை நிச்சயம் வென்றே தீருவோம் என்று அதிமுக தலைமை சபதமெடுத்துள்ளது.
அதற்காக அதிமுக சார்பில் மிக மிக நீண்ட எண்ணிக்கை அடங்கிய தேர்தல் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலை அதிமுக தலைமை இன்று (19.07.2018) வெளியிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 35 வாக்காளர்களுக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில், உள்ளுர் நிர்வாகிகள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இஸ்லாமியர்களின் வாக்குகளை வசப்படுத்துவதற்காகவும், அதிமுக மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும், தி.மு.க.வின் நிரந்தர கூட்டாளியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் தலைமையில், நட்சத்திர பேச்சாளர்களை தி.மு.க. தலைமை களமிறக்க உள்ளது.
scan0319மேலும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வின் ஆதரவாளர்களையும், நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கும், வசப்படுத்துவதற்கும் திமுக தலைமை பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
திமுக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்த், முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகனின் மகன் என்பதால், கதிர் ஆனந்தை தோல்வியடைய செய்வதின் மூலம் துரைமுருகனை மறைமுகமாக பலித்தீர்த்து கொள்ளலாம், இதன் மூலம் துரைமுருகன் தி.மு.க.வில் செலுத்தி வரும் ஆதிக்கத்தை குறைத்து விடலாம் என்று, இதுநாள்வரை காத்திருந்த திமுகவில் உள்ள பெரும்பாலான பெரும் புள்ளிகள் கருதுகின்றனர். துரைமுருகன் மீது தி.மு.க.வில் உள்ள உட்பகை கதிர் ஆனந்த் வெற்றியை பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வேலூர் மக்களவை தொகுதி புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி. சண்முகம் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகவே இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கியுள்ளார். பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளரான இவர், தான் ஜெயித்தால் எப்படியும் மந்திரியாகிவிடலாம் என்ற நினைப்பில் வாரி இறைத்து வருகிறார். இவர் கனவு நனவாகுமா? வேலூர் மக்களவை தொகுதி வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால், எது எப்படியோ வேலூர் மக்களவை தொகுதி மக்கள் உண்மையிலுமே கொடுத்து வைத்தவர்கள்தான்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com