விபத்துக்குள்ளான முதியவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்!-என்ற தலைப்பில் நேற்று (31.07.2019) ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதில் மேற்காணும் காணும் முதியவா் 29.07.2019 – அன்று காலை 10.30 மணியளவில் திருச்சி திருவெறும்பூர் முனீஸ்வரன் கோவில் அபிநயா ஹோட்டல் அருகில் திருச்சி –தஞ்சாவூா் சாலையை நடந்து கடக்க முயற்சி செய்தபோது, தனியார் பேருந்து (மஹாலெஷ்மி பேருந்து) மோதி விபத்துக்குள்ளானதாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சிகிச்சையில் இருந்து வரும் இவரால் வாய்பேச முடியாமல் சுயநினைவின்றி இருந்து வந்தவர் தற்போது சற்று மயக்கம் தெளிந்த நிலையில் தன் பெயா் கேசவன் என்றும், ஊர் மாரியம்மன் கோவில் தெரு, ஆத்துக்குறிச்சி, ஜெயங்கொண்டம் என்றும், மனைவி இறந்துவிட்டதாகவும், மூன்று மகன்கள் உள்ளதாகவும் கூறுகிறார். மற்ற விவரம் அவரால் கூறமுடியவில்லை.
எனவே, இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளார். இவரைப் பற்றிய தகவல் அவரது உறவினர்களுக்கு விரைவில் சென்றடையும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
அதன்படி அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பார் சீனிவாசன் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்கள், மேற்காணும் முதியவர் பற்றிய விபரத்தை தெரிவித்தார். அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பார் சீனிவாசன் உடனடியாக போலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில், ஆத்துக்குறிச்சி சென்ற போலிசார், முதியவரின் மகன்களான ராஜேந்திரன், ராமலிங்கம், செந்தில்நாதன் ஆகியோரின் இருப்பிடத்தை கண்டு பிடித்து தகவல் தெரிவித்தனர். இரவோடு, இரவாக முதியவர் கேசவனை, அவரது மகன்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். தற்போது முதியவர் கேசவன், அவரது மகன் வீட்டில் பத்திரமாக இருக்கிறார்.
முதியவர் கேசவன், மகன் வீட்டில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், அதற்கான படத்தையும் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பார் சீனிவாசன் நமது “உள்ளாட்சித்தகவல்” அலுவலகத்திற்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்திம காலத்தில் அனாதையாக சுற்றி திரிந்து விபத்துக்குள்ளான முதியவர் கேசவனை, அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்த நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்களுக்கும், ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, முதியவரின் மகன்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து இரவோடு, இரவாக முதியவர் கேசவனை அவரது மகன்கள் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு பேருதவி புரிந்த அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பார் சீனிவாசன் மற்றும் காவல்துறை குழுவினருக்கும், நமது “உள்ளாட்சித்தகவல்” வாசகர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.
-கே.பி.சுகுமார்.
GOOD HELP TO HIM SIR, VOTE OF THANKS TO UTL FOUNDER, Mr. Durai Benjamin sir, & ARIYALUR INSPECTOR Mr. Seenivasan SIR.