இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்!

யாழ்ப்பாணம், மாதகல் துரை பகுதியில் கடற்கரைக்கு அருகில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 122.5 கிலோ கேரள கஞ்சா மூட்டைகளை, இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இது கேரளாவில் உற்பத்தியாகும் கஞ்சா என்பதால் இதை “கேரள கஞ்சா” என்றே இங்கு அழைக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கடல்  மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல் நடைப்பெற்று வருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்திய கடற்படையினரும் மற்றும் கடலோர காவல் படையினரும் விழிப்பாக இருப்பது நல்லது.

இந்நிலையில் இலங்கை கடற்படை வீரர்களும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து கல்பிட்டிய குடாவ பிரதேசத்தில் நடத்திய சோதனையில், கேரள கஞ்சாவுடன் சென்ற இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை தீவு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறிவருவது உண்மையிலுமே கவலையளிக்கிறது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply