கடற்கரைகளை சுத்தம் செய்த இலங்கை கடற்படையினர்!

மனித நடவடிக்கைகளின் காரணமாக கடற்கரை பகுதிகள் அனைத்தும் மாசு அடைந்து உள்ளன. கடற்கரை பகுதிகள் அனைத்தும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. இவற்றை அள்ளி தூய்மை செய்யும் பணிகளை, இலங்கை கடற்படை வீரர்கள் தொடர்ந்து வாரந்தோறும் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், கலுவெல்ல, கின்தோட்டை மற்றும் ஹம்பன்தோட்டை நகரத்தின் கடற்கரைகளை ஆகஸ்ட் 03 சுத்தம் செய்தனர்.

இலங்கை கடற்படையினரின் இப்புனித பணி பொதுமக்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN August 22, 2019 7:02 pm

Leave a Reply