யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னார் கடற்கரை பகுதிகளில் கேரள கஞ்சா வைத்திருந்ததாக 5 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 84 கிலோ கேரள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், மன்னார், ஒலுதுடுவாய் கடற்கரை ஓரம் அனாதையாக கிடந்த 461 கிலோ பதப்படுத்தப்பட்ட பீடி இலை மூட்டைகளையும், இலங்கை கடற்படையினர் இன்று மீட்டுள்ளனர்.
இந்த (2019) ஆண்டு மட்டும் இதுவரை சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட 28,000 கிலோ பதப்படுத்தப்பட்ட பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளதாக, இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.