எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 04 இந்திய மீனவர்களை நெடுந்தீவு கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கு கடல் பகுதியில், இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 20,31 மற்றும் 58 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
– என்.வசந்த ராகவன்.
Meenavargalai kaithu seithathu kandikkathakkathu.