கடலுக்குள் சென்ற மீனவருக்கு திடீரென உடல்நலக்குறைவு!-காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த இலங்கை கடற்படையினர்.

இலங்கை நீர்வளத்துறை அமைச்சகத்தினால், இலங்கை கடற்படையினருக்கு அளிக்கக்கப்பட்ட அவசர தகவலின் அடிப்படையில், காலி கலங்கரை விளக்கிலிருந்து 14 கடல் மைல் தொலைவில் மீன் பிடி நடவடிக்கைகளுக்காக படகில் கடலுக்குள் சென்றிருந்த மீனவர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடுமையாக பாதிப்படைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படை குழுவினர், முதலுதவி சிகிச்சையளித்து கடற்படை படகின் மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்து, அதன் பின்பு உடனடியாக அவரை கராபிட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply