யாழ்ப்பாணம் தொண்டமநாரு, அக்கரெய் கடற்கரைக்கு அருகிலுள்ள குழந்தைகள் பூங்கா அருகே சந்தேகத்திற்கிடமான ஒரு வேனை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டபோது, வேனில் 6 பேர் இருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்களில் ஒருவர் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு குடிபெயர்ந்திருப்பது தெரிய வந்தது. மற்ற 05 பேர், சட்டவிரோதமாக நாட்டிற்கு வந்த நபரை அழைத்துச் செல்ல வந்த நபர்கள் என்பதும், இவர்கள் திருகோணமலை பகுதியில் வசிப்பவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த 6 பேரையும் இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
-என்.வசந்த ராகவன்.