சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியத்தில், குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் ஏழை கர்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு இன்று நடைப்பெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட ஏற்காடு ஒன்றிய அலுவலர் மல்லிகா தலைமையில் விழா துவங்கியது.
ஏற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட 67 மலைக் கிராமங்களில் இருந்து 150 கர்பிணி பெண்கள் இதில் கலந்துக்கொண்டனர். அவர்களுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சந்தனம், குங்குமம் பூசி, வளையல் அணிவித்து, வளைகாப்பு நடத்தினர். பின்னர் கர்பிணி பெண்களுக்கு புளிசாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், குஸ்கா என ஐந்து வகை உணவுகள் வழங்கினர்.
மேலும், கர்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் அங்கு பார்வைக்கு வைத்திருந்தனர்.
-நே.நவீன் குமார்.
Very superb