1000 கிலோ பீடி இலைகளை கடத்தி வந்த 3 இந்தியர்கள் இலங்கையில் கைது!

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர், இலங்கை வட மேற்கு கடல் பகுதியில் கற்பிட்டி, குதிரைமலை கடற்கரையில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான சிறிய மீன்பிடி  படகை ஆய்வு செய்யதனர். அப்போது  சுமார் 1000 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 33 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், பீடி இலைகளை கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மூவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இந்தியாவில் இருந்து  கடல் வழியாக படகு மூலம் பீடி இலைகளை கொண்டு வந்து, இலங்கையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க வந்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, கைது செய்யப்பட்ட நபர்கள்  மற்றும் பீடி இலைகள் அனைத்தும், சட்ட விசாரணைக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-என்.வசந்த ராகவன்.

 

One Response

  1. MANIMARAN November 13, 2019 8:24 pm

Leave a Reply