இலங்கையில் மோட்டார் பைக்கை திருடிய திருடன் ஒருவன், போலீஸுக்கு பயந்து திருடிய மோட்டார் பைக்கை, ஜா எலவின் தண்டுகம பாலத்திற்கு கீழ் ஆற்று நீருக்குள் பதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
நீருக்குள் பதுக்கி வைத்திருந்த மோட்டார் பைக்கை மீட்டுதருமாறு இலங்கை கடற்படையினருக்கு காவல்துறையினர் அளித்த தகவலின்பேரில், இலங்கை கடற்படையின் நீச்சல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, மோட்டார் பைக்கை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.