கேஸ் டேங்கர் வெடித்து 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி!-சூடானில் நடந்த துயரம்.

சூடானில் கேஸ் டேங்கர் வெடித்த தொழிற்சாலை நிர்வாகத்துடன் இந்திய தூதரகம் தொடர்பிலிருக்கிறது. தூதரக ஊழியர்கள் விபத்து நடந்த இடத்தில் இருக்கின்றனர்.  சூடான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தோரை விரைவாக அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அல்-அமால் மருத்துவமனை, ஒம்டுர்மான் டீச்சிங் மருத்துவமனை மற்றும் இப்ராஹிம் மாலிக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியத் தூதுவர் மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு சென்று அனைத்து உதவிகளும் அளித்து வருகிறார்.

இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply