அன்று(03.12.2019)
+++++++++++++++++++++
இன்று(25.01.2020)
திருச்சி – கல்லணைச் சாலையின் அவலநிலை!-சொல்வதற்கு ஒன்றுமில்லை!-என்ற தலைப்பில் 03.12.2019 அன்று நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் உரிய ஆதாரத்துடன் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். அதில் திருச்சி – கல்லணைச் சாலையில் சர்கார்பாளையம், சிவன் கோயில் அருகில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யப்படவில்லை. பொதுமக்களும், கல்லணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
மேலும், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், ஊரகத்துறைச் செயலாளர், வருவாய்துறைச் செயலாளர் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்து இருந்தோம்.
இச்செய்தி வெளிவந்த ஒரு வாரத்திற்குள், மண்ணை கொட்டி தற்காலிகமாக பள்ளத்தை மூடியதோடு, கல்லணை சாலை நெடுகிலும் மண் அரிப்பு ஏற்பட்டு இருந்த பள்ளங்களிலும் மண்ணை கொட்டினார்கள்.
இதற்கிடையில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைப்பெற்றதால், பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கல்லணை சாலையை சரிசெய்யும் பணி தற்போது மீண்டும் நடைப்பெற்று வருகிறது. செய்யும் பணியை தரமாக செய்ய வேண்டும். அதுதான் அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.
நமது செய்திக்கும், தகவலுக்கும் மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக அரசிற்கும், மேற்குறிப்பிட்ட அரசுதுறைச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், நமது “உள்ளாட்சித்தகவல்” செய்தி குழுமத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம்.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
இதுக்குறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
http://www.ullatchithagaval.com/2019/12/03/45477/
Great sir, timely take the action