கடல் மார்க்கமாக தங்கம் கடத்திய 04 இந்தியர்கள் இலங்கையில் கைது! -படகு மற்றும் 4200 கிராம் தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்.

இலங்கை குதிரமலை கடல் பகுதியில், இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு ஒன்றை அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அங்கு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 41 தங்க பிஸ்கட்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 04 கிலோ மற்றும் 200 கிராம் எடையுள்ள இந்த தங்க பிஸ்கட்டுகளுடன் 04 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30, 35, 36 மற்றும் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், தங்கத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்ட்ட 04 கிலோ மற்றும் 200 கிராம் தங்கம் மற்றும் 04 இந்தியர்களையும் சின்னப்பாடு சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்தராகவன்.

Leave a Reply