நடிகர் ரஜினிகாந்த் 2002 ஆண்டு முதல் 2005 -ம் ஆண்டு வரை வருமானத்தை சரியாக காட்டவில்லை என்று குற்றம் சுமத்தி, வருமான வரித்துறை அவருக்கு 66 லட்சம் அபராதம் விதித்தது. ஆனால், அந்த குற்றச்சாட்டுக்கு வருமான வரித்துறை உரிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை, உரிய விசாரணையும் நடத்தவில்லை.
இதனால் அந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். உரிய விசாரணையும், ஆதாரங்களும் இல்லாததால், நடிகர் ரஜினிகாந்த் மீது விதித்த அபராதம் செல்லாது என்று, வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஜூலை 2013-ல் தீர்ப்பளித்தது.
அதில் திருப்தியடையாத வருமான வரித்துறை அதிகாரிகள், தாங்கள் விதித்த அபராதம் செல்லும் என்று, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்நிலையில், 2018-ல் (Circular No. 3/2018, Date:11/07/2018) வருமான வரித்துறை புதிய கொள்கை முடிவு எடுத்தது. அதன்படி ரூ.1 கோடிக்கு கீழான தொகை சம்பந்தப்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்திலோ, ரூ.2 கோடிக்கு கீழான தொகை சம்பந்தப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலோ இருந்தால், அந்த வழக்குகளை கைவிடுவது என்று முடிவெடுத்தது.
இந்த புதிய கொள்கை முடிவின் காரணமாக, பல வழக்குகளை வருமான வரித்துறை வாபஸ் பெற முடிவெடுத்தது. (Circular No. 5/2019, Date: 05/02/2019)
அவற்றில் ஒரு வழக்குதான் நடிகர் ரஜினிகாந்த் மீது விதித்த 66 லட்சம் அபராதம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு. அந்த வழக்கைதான் வருமான வரித்துறை தற்போது வாபஸ் பெற்றுள்ளது.
இதில் நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்ய என்ன இருக்கிறது?!
எல்லாம் விளம்பரம்…! வெற்று கூச்சல்…..!
-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
ha, ha ha……….