இலங்கை கடல் பகுதியில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட அனலதீவு வடக்கு கடல் பகுதியில், சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். அவர்களிடமிருந்து 3 படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்து அழைத்து வரப்பட்ட 11 இந்திய மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர காவல்படையினர் மூலம் யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்தராகவன்.

Leave a Reply