விண்வெளிக்கு செல்லும் தமிழ் மாணவி!

t.studentவிண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு இலங்கை தமிழ் மாணவியொருவர்  பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சிவேன் ஞானகுலேந்திரன் என்ற மாணவி தெரிவாகியுள்ளார்.

செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயின்று வருகிறார்கள். 

இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தீர்மானித்ததின் அடிப்படையில் போட்டி பரீட்சையின் போது சிவேன் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் .

இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருந்ததுடன் விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.