சேலம் மாவட்டம், ஏற்காட்டில் “கொரோனா” தொற்று ஏற்படாமல் இருக்க பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று நடைப்பெற்றது.
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகர் தலைமையில், ஏற்காடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கை வைக்கும் இடங்களில் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். பேருந்துகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பேருந்து பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கார், ஆட்டோ ஸ்டேண்ட் மற்றும் பொது இடங்களில் “கொரோனா” தொற்று பரவாமல் தற்காத்துக்கொள்வதற்கு கைகளை சுத்தமாக கழுவுதல், மாஸ்க் அணிந்து கொள்ளுதல், இருமல் மற்றும் தும்மல் வரும்போது முகத்தை துணியால் மறைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
-நே.நவீன் குமார்.