“கரோனா வைரஸ்” தொற்று பரவாமல் தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் மார்ச் 31-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மறு உத்தரவு பிறப்பிப்பதற்கு கிட்டத்தட்ட இன்னும் 15 நாட்கள் இருக்கிறது. இந்த இடைப்பட்ட நாட்களில் ஆபத்தான, பழுதடைந்த மற்றும் சேதமடைந்த பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், மேற்கூரைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் ஆகியவற்றை மராமத்து பணி செய்து புதுப்பிப்பதற்கும், பள்ளி, கல்லூரிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் சேதமடைந்த தண்ணீர் மற்றும் குடிநீர் குழாய்கள் மற்றும் சாக்கடைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்து துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கும் மற்றும் பெயிண்ட்டிங் வேலைகளை செய்வதற்கும் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுசம்மந்தமாக பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சகத்திற்கு, தமிழக முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
அதே போல், தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கங்களிலும் உள்ள மராமத்து பணிகளையும், துப்புரவு பணிகளையும் மேற்கொள்வதற்கு, சம்மந்தப்பட்ட சுற்றுலாத் துறை அமைச்சகத்திற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
மேலும், ஆபத்தான, பழுதடைந்த மற்றும் சேதமடைந்த பள்ளி, கல்லூரி, சுற்றுலா தலங்கங்களில் உள்ள கட்டிடங்களின் ஸ்த்திர தன்மை குறித்து ஆய்வு செய்து சான்று வழங்குவதற்கு பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு, பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் மூலம் போர்கால அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ஒரு இக்கட்டான, நெருக்கடியான, ஆபத்தான இந்த விடுமுறை நாட்களை கூட, ஆக்கப்பூர்வமான பயனுள்ள செயல்களுக்கு பயன்படுத்தலாமே?!
-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Superb idea, follow the TN GOVERNMENT ? ……
LET WE WAIT AND SEE .