விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பலில் போதைப்பொருட்கள் கடத்தல் : இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தகவல்!

ltte shipவிடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல் ஒன்றின் மூலம் இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் கப்பல் போரின் பின்னர் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த கப்பல் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் இதனை கடத்துவோர் குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலுடன் ஐக்கிய தேசியக் கட்சியை தொடர்புபடுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

RANILமாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் போதைப்பொருளை 24 மணித்தியாலங்களுக்குள் ஒழிக்க முடியும். சர்வதேசத்தில் போதைப்பொருளுக்கு எதிராக செயற்படும் குழுவை அழைத்து விசாரணைகளை நடத்துவதன் மூலம் இலங்கையில் போதைப்பொருளை ஒழிக்கமுடியும். இதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமா? என்றும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.