கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ரூ 605 கோடி மதிப்பு உள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!- 9 பாகிஸ்தானியர்கள் கைது.

உலகமே “கொரோனா வைரஸ்” தொற்றால் கதிகலங்கி போயிருக்கும் இந்த தருணத்தில், பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர், கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப் பொருட் கடத்தலில் ஈடுபட்டுள்ளது, உலக நாடுகள் அனைத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் இருந்து சுமார் 463 கடல் மைல் (சுமார் 835 கி.மீ) தொலைவில், எந்த நாட்டின் கொடியும் இல்லாமல், கள்ளத்தனமாக சர்வதேச கடலில் வந்து கொண்டிருந்த ஒரு கப்பலை, இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, அதில் Methamphetamine போதைப் பொருள் 605 கிலோ, Ketamine போதைப் பொருள் 579 கிலோ, பாபுல் போதை மருந்து 200 பாக்கெட் மற்றும் அடையாளம் காணப்படாத 100 கிராம் போதை மாத்திரைகள் ஆகியவற்றை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலில் ஈடுப்பட்ட  9 பாகிஸ்தானியர்களையும்  கைது செய்து, போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.605 கோடி என்கின்றனர், இலங்கை கடற்படை அதிகாரிகள்.

-என்.வசந்த ராகவன்.

 

One Response

  1. MANIMARAN April 5, 2020 10:58 pm

Leave a Reply