லைபீரிய நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 36 வயதான சோலிஸ் ரியான் என்ற நபருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிந்து, அக்கப்பலில் இருந்த உள்ளூர் முகவரான எம்.எஸ்.சி லங்கா (பிரைவேட்) லிமிடெட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த நபர், இலங்கை “கோவிட் -19”- தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்திற்கு அளித்த தகவலின் பேரில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடனும், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி வழிகாட்டுதலுடனும், கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (சிபிஆர்என்) பிரிவு, கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் இருந்த அந்த கப்பலை அணுகி, சுகாதார நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட தேவையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கொரோனா நோய் வாய்ப்பட்ட அந்த நபரை கரைக்கு கொண்டு வந்து. துறைமுக வளாகத்திலேயே கிருமி நீக்கம் செய்து, கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.
Good survive, hands up to SRILANKAN GOVERNMENT