பூரண மதுவிலக்கு நடவடிக்கையானது நம் மக்களுக்கும், பெண்களுக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் நலன் காக்கும் வகையில் அமையும். எனவே, பொதுமக்கள் நலன் காக்கும் வண்ணம், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டுமென, பெண் வழக்கறிஞர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமுலில் இல்லாததால் மக்களிடையே குடிப்பழக்கம் பெருகி அவர்களது உடல் நலமும், மனநலமும், வாழ்க்கையும் சீர்கெடுவதால் மது விலக்கை அமல்படுத்தக் கோரி பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
தற்போது “கொரோனா” வைரஸை சமூக தொற்றாகாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஊரடங்கு உத்தரவின் பொழுது அனைத்து மதுக்கடைகளும் தமிழகத்தில் மூடப்பட்டது.
மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மனநோய்க்கோ, உடல் தளர்ச்சிக்கோ, மனத்தளர்ச்சிக்கோ, தற்கொலைக்கோ ஆளாகவில்லை. அவ்வாறு எந்த செய்திக்குறிப்பும் தற்போது வரை இல்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டுகிறோம்.
இவ்வாறு, பெற்றோர் அறக்கட்டளை வழக்கறிஞர் தி.ஜெயந்திராணி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் எம்.சித்ரா ஆகியோர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-எஸ்.திவ்யா.
Tamil nattil madhu vilakku, aerpattal athu ulaga athisiyam aagum