தமிழகம் முழுவதும் கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கிரானைட் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டம், ஏற்காடு, மஞ்சக்குட்டை கிராமத்தில் உள்ள குவாரி ஒன்றில் இருந்து கிரானைட் கற்கள் இரவு நேரத்தில் லாரிகள் மூலம் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தல் சம்பவம் கனிம வளத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் ஆதரவோடுதான் நடைப்பெற்று வருகிறது.
மே 18-ந் தேதி இரவு 12.30 மணியளவில், மஞ்சக்குட்டை கிராமத்தில் இருந்து லாரியில் கிரானைட் கற்கள் ஏற்றப்பட்டு, ஒன்டிக்கடை புறக்காவல் நிலையம் வழியாக சென்றபோது, அங்கிருந்த போலீசார் அந்த லாரி ஓட்டுனர்களிடம் சகஜமாக பேசி அனுப்பி வைத்தனர் என்பதை கண்கூடாகப் பார்க்கும்போது நெஞ்சம் பதைக்கிறது.
-நே.நவீன் குமார்.