ஹைட்ராக்சி குளோரோகுயின் (Hydroxy chloroquine) என்பது பிரதானமாக மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். எனினும் இது அனைத்து வகை மலேரியா தொற்றுக்களுக்கும் எதிராகப் பயன்படுத்த இயலாது. ஏனெனில், சில மலேரியா ஒட்டுண்ணி வகைகள் இம்மருந்தின் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக இம்மருந்துக்கு எதிர்ப்புத்தன்மையை அடைந்துள்ளது.
மேலும், இது அமீபா வயிற்றுளைவு, முடக்குவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில், தற்பொழுது “கொரோனா” வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் (Hydroxy chloroquine) பயன்படுத்த பரிந்துரைச் செய்து, நோயாளிகளுக்கு பயன்படுத்தியும் வந்தனர்.
அந்த வகையில், வேறு வழியில்லாமல் மலேரியா நோய்க்கு எதிராக வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின்(Hydroxy chloroquine) என்ற எதிர்ப்பு மருந்தை “கொரோனா வைரஸ்” தொற்று நோயாளிகளுக்கு வழங்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்தது.
ஆனால், தற்போது வெளியிடப்பட்ட ஆய்வில் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் நோயாளிகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை என்றும்,
coronary heart disease,
heart failure,
hypokalaemia,
bradycardia,
or congenital long-QT syndrome,
among others.
இதய நோய் மற்றும் இதய செயலிழப்பை உண்டாக்கி மரணத்தை விளைவிக்கிறதும் என்றும் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
இதனால் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
இதுகுறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
http://www.ullatchithagaval.com/2020/03/23/46828/
Immediate to stop it……. Globaly follow the INTERNATIONAL MEDICAL ASSOCIATION……