தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நாளை (ஜீன் 22) முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!-உத்தரவின் உண்மை நகல்.

Hon’ble Mr. Justice Amreshwar Pratap Sahi, Chief Justice.

OMSCT18062020

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக் காரணமாக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்ததால், நீதிமன்றங்கள் செயல்படாமல் இருந்துவந்தன. முக்கிய மற்றும் அவசர வழக்குகளில் விசாரணை ஆன்லைனில் காணொளி மூலம் மட்டும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களை நாளை (ஜீன் 22-ஆம் தேதி) முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ‌.பி. சாகி தலைமையிலான நிர்வாக குழு, மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோயம்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களை நாளை (ஜீன் 22-ஆம் தேதி) முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 50 சதவீத ஊழியர்களுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும் என, அந்தந்த மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றத்திற்கு வர விரும்பாத வழக்கறிஞர்கள் காணொளி மூலம் வழக்கில் ஆஜராகவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அரக்கோணம், ஸ்ரீரங்கம், வள்ளியூர், ஆலங்குளம், வேலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

சமூக இடவெளி மற்றும் நோய் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN June 21, 2020 8:27 pm

Leave a Reply