மத்திய அமைச்சரவையில் எடுக்கபட்ட முக்கிய முடிவுகள்!-முழு விபரம்.

The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi met on 24th June, 2020 and took several landmark decisions, which will go a long way providing a much needed boost to infrastructure across sectors, which are crucial in the time of pandemic.

  1. Animal Husbandry Infrastructure Development Fund set-up

Background :

In pursuance of recently announced Atma Nirbhar Bharat Abhiyan stimulus package, Cabinet today approved setting up of Animal Husbandry Infrastructure Development Fund (AHIDF) amounting to Rs. 15000 crore.

Government had earlier approved the Dairy Infrastructure Development Fund (DIDF) worth Rs. 10,000 crores for incentivizing investment by cooperative sector for development of dairy infrastructure. However, the MSMEs and Private companies also need to be promoted and incentivized for their participation in processing and value addition infrastructure in the animal husbandry sector.

The AHIDF approved today would incentive infrastructure investments in dairy, meat processing and animal feed plants. The eligible beneficiaries under the Scheme would be Farmer Producer Organizations (FPOs), MSMEs, Section 8 Companies, Private Companies and individual entrepreneur with only 10% margin money contribution by them. The balance 90% would be the loan component to be made available to them by scheduled banks.

Government of India will provide 3% interest subvention to eligible beneficiaries. There will be 2 years moratorium period for repayment of loan with 6 years repayment period thereafter. Government of India would also set up a Credit Guarantee Fund of Rs. 750 crore to be managed by NABARD which would provide credit guarantee to the projects which are covered under the MSME defined ceilings. Guarantee Coverage would be upto 25% of the Credit facility of borrower.

Benefits :

There is huge potential waiting to be unlocked through private sector investment in animal husbandry sector. The AHIDF with the interest subvention scheme for private investors will ensure availability of capital to meet upfront investment required for these projects and also help enhance overall returns/ pay back for investors. Such investments in processing and value addition infrastructure by eligible beneficiaries would also promote exports.

Since almost 50-60% of the final value of dairy output in India flows back to farmers, the growth in this sector can have significant direct impact on farmer’s income. Size of dairy market and farmers’ realization from milk sales is closely linked with development of organized off-take by cooperative and private dairies. Thus, investment of Rs. 15,000 crores through AHIDF would not only leverage several times more private investment but would also motivate farmers to invest more on inputs thereby driving higher productivity leading to increase in farmers income. The measures approved today through AHIDF would also help in direct and indirect livelihood creation for about 35 lakh persons.

  1. Declaration of Kushinagar Airport in UP as International Airport

Background :

Kushinagar is an important Buddhist pilgrimage site, where Gautama Buddha attained Mahaparinirvana. It is regarded as a very sacred Buddhist pilgrimage centre where Buddhists pilgrims from all over the world come for pilgrimage. Kushinagar is dotted with several  other Buddhist sites in the nearby surroundings like Sravasti (238 km), Kapilvastu (190 km) and Lumbini (195 km) that makes it an attraction for both followers and visitors alike. Kushinagar already serves as the presenting site for Buddhist circuit pilgrimage spanning across India and Nepal. Union Cabinet has approved the proposal to declare Kushinagar Airport in Uttar Pradesh as an International Airport.  

Benefits :

The Buddhist Circuit is a key pilgrimage destination for 530 million practicing Buddhists across the globe. Hence declaration of Kushinagar Airport as an ‘International Airport’ will offer improved connectivity, wider choice of services at competitive costs to the air-travellers resulting in boosting of domestic/international tourism and economic development of the region.

On any given day, around 200-300 devotees from Thailand, Cambodia, Japan, Burma, etc are coming and offering their prayers at Kushinagar. However, this International tourist destination has no direct connectivity, which has been a long pending demand of the visitors.

Direct international connectivity to Kushinagar would substantially increase the number of foreigners and domestic tourists visiting  Kushinagar, which will also provide impetus to economic development of the region. The international airport is expected to boost the already growing tourism and hospitality ecosystem in the country.

  1. Additional investment by OVL towards further development of Shwe oil & gas project in Myanmar approved

Background :

ONGC Videsh (OVL) has been associated with exploration and development of Shwe gas project in Myanmar since 2002, as part of a consortium of companies from South Korea, India and Myanmar. The Indian PSU, GAIL, is also a co-investor in this project. OVL has invested US$ 722 million (about Rs 3949 crores, as per corresponding average annual exchange rate) till 31st March 2019 in this project. The first gas from Shwe Project was received in July 2013 and plateau production was reached in December 2014. The Project has been generating positive cash flows since FY 2014-15. The Cabinet Committee on Economic Affairs today approved additional investment of US$ 121.27 million (about Rs 909 crores; 1 US$ = Rs 75) by ONGC Videsh Ltd (OVL) towards further development of Shwe oil & gas project in Myanmar.

Benefits :

The participation of Indian PSUs in oil & gas exploration and development projects in neighbouring countries is aligned with India’s Act East Policy, and also part of India’s strategy to develop Energy Bridges with its neighbours in addition to further strengthening India’s energy security needs.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில், 24 ஜுன், 2020 இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,  பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்த முடிவுகள், கொரோனோ பெருந் தொற்றுக்காலத்தில்,  பல்வேறு துறைகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைப்பு

பின்னணி :

அண்மையில்அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்ட ஊக்குவிப்புத் தொகுப்பின் தொடர்ச்சியாக,  ரூ.15,000 கோடி மதிப்பில், கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

பால்வளக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கூட்டுறவுத்துறை முதலீடுகளுக்கு உதவும் நோக்கில், ரூ.10,000 கோடிமதிப்பிலான பால்வளக்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்ஒன்றை அமைக்க மத்தியஅரசு, ஏற்கனவே அளித்துள்ளது.எனினும், குறு,சிறு, நடுத்தரத்தொழில் துறையினர் மற்றும் தனியார் நிறுவனங்களையும் ஊக்குவித்து, அவர்களுக்கு உதவியளித்து, கால்நடை வளர்ப்புத் தொழிலில் மதிப்புக் கூட்டப்பட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. 

இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்,பால்வளம், இறைச்சி பதப்படுத்துதல், கால்நடைத் தீவனத் தாவர வளர்ப்புக் கட்டமைப்பு முதலீட்டிற்கு ஊக்கத் தொகைஅளிக்கப்படும்.  10 சதவீத விளிம்பு நிலைப் பணப்பங்களிப்புடைய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்,குறு,சிறு,நடுத்தரத்தொழில் நிறுவனங்கள்,  பிரிவு-8இல் உள்ளதொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தொழில் முனைவோர் உள்ளிட்ட தகுதி வாய்ந்த பயனாளிகள்,  இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.   இவர்களுக்கு எஞ்சிய 90 சதவீத நிதி, வர்த்தக,வங்கிகளால் கடனாக வழங்கப்படும். 

வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, மத்தியஅரசு 4 சதவீத வட்டித் தள்ளுபடியும்,  எஞ்சிய மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 3 சதவீதவட்டித் தள்ளுபடியும் அளிக்கும்.கடன்பெற்றதிலிருந்து 2 ஆண்டுகளுக்கு, கடனைத் திருப்பிச்செலுத்த வேண்டியதில்லை. அதற்கடுத்த 6 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இதுதவிர, நபார்டு வங்கிக் கட்டுப்பாட்டில்,  ரூ.750கோடிகடன் உத்தரவாத நிதியம் ஒன்றையும் மத்திய அரசு அமைக்கவுள்ளது.  இந்த நிதியத்திலிருந்து, குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட உச்சவரம்பு வரையிலான திட்டங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். கடன்தாரர் பெறும் கடன் தொகையில் 25 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் கிடைக்கும். 

பலன்கள் :

கால்நடை வளர்ப்புத் தொழிலில் தனியார்துறை முதலீடு செய்வதற்கான பெரும்வாய்ப்புகள் உள்ளன.  கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்,  தனியார் முதலீட்டாளர்களுக்கு வட்டி த்தள்ளுபடி அளிக்கப்படுவதுடன்,  இந்தத் திட்டங்களுக்குத் தேவையான வெளிப்படையான முதலீட்டிற்குத் தேவையான மூலதனம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, முதலீட்டாளர்களுக்கு உரிய லாபம் கிடைக்கவும்/கடனைத் திருப்பிச் செலுத்தவும் உதவும்.   பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுக் கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள்,  தகுதி வாய்ந்த பயனாளிகள் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.  

இந்தியாவில் உற்பத்தியாகும் பால் வளப் பொருள்களின் இறுதி மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் வரை விவசாயிகளுக்குக் கிடைப்பதோடு,  இத்துறையில் ஏற்படும் வளர்ச்சி, விவசாயிகளின் வருமானத்தில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும்.  பால் விற்பனை மூலம்,பால் பொருள்கள் சந்தையின் அளவு மற்றும், விவசாயிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாவதும், கூட்டுறவு மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் அளவு அதிகரிப்புடன் நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே, கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.15,000 கோடி முதலீடு, தனியார் முதலீட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, விவசாயிகள் தங்களது வருமானத்தை அதிகரிக்க ஏதுவாக, உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான அளவுக்கு இடு பொருள் முதலீடு செய்ய விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் அமையும்.   இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், சுமார் 35 லட்சம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் உதவும். 

2.  குஷிநகர் விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பு

பின்னணி  : 

கவுதம புத்தர் இயற்கை எய்திய பிறகு மகாபரி நிர்வானம் அடைந்த முக்கியயாத்திரைத்தலம் குஷிநகர்.  பவுத்த மதத்தினரின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலமாக கருதப்படும் இங்கு, உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள் வருகின்றனர்.குஷிநகரைச் சுற்றி ஸ்ரவாஸ்தி (238கி.மீ), கபிலவஸ்து (190கி.மீ.) மற்றும் லும்பினி (195கி.மீ.)  உள்ளிட்ட வேறு சில புத்த மதத் தலங்களும் உள்ளதால்,  புத்த மதத்தினர் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலமாகவும் உள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள புத்த மத யாத்திரைத் தலங்களில் குஷிநகர் ஏற்கனவே முக்கிய இடமாகத் திகழ்கிறது. எனவே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பலன்கள் :

உலகெங்கிலும் வாழும் சுமார் 530 மில்லியன் பௌத்தர்களுக்கு, புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய தலங்கள், முக்கியமான யாத்திரைத் தலங்களாகக் கருதப்படுகின்றன.  எனவே,  குஷிநகர் விமான நிலையத்தை, ‘சர்வதேச விமான நிலையமாக’  அறிவித்திருப்பது,  கூடுதல் விமானங்களை இயக்குவதற்கும்,  தொழில் போட்டி காரணமாக விமானப்பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வதற்கும் வழிவகுப்பதோடு,  உள்நாட்டு /சர்வதேச சுற்றுலாவிற்கு ஊக்கம் அளித்து,  அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிப்பதாக அமையும். 

தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், பர்மா (மியான்மர்)  போன்றநாடுகளிலிருந்து தினந்தோறும் சுமார் 200  முதல் 300 பக்தர்கள் குஷிநகர் வந்து வழிபாடு செய்கின்றனர்.  எனினும்,  இந்த சர்வதேச சுற்றுலாத் தலத்திற்கு வர நேரடி விமானச் சேவை ஏற்படுத்த வேண்டுமென்பது,  சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்தது.  

குஷிநகருக்கு நேரடியாக சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம்,  குஷிநகர் வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு,  அப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும். இந்த சர்வதேச விமான நிலையம், நாட்டில் ஏற்கனவே வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சூழலுக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3.  மியான்மர் நாட்டிலுள்ள ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஓ.வி.எல்.நிறுவனத்தின் கூடுதல் முதலீட்டிற்கு ஒப்புதல்

பின்னணி  : 

தென்கொரியா,  இந்தியா மற்றும் மியான்மர் நாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக,  ஓ.என்.ஜி.சி. விதேஷ்நிறுவனம் (ஓ.வி.எல்.),  கடந்த 2002 முதல், மியான்மர் நாட்டின் ஷ்வே எரிவாயுத் திட்டத் துரப்பண மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளது.   இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான கெயில் நிறுவனமும், இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.  ஓ.என்.ஜி.சி.யின் சர்வதேசப் பிரிவான ஓ.என்.ஜி.சி.விதேஷ் நிறுவனம்  31 மார்ச், 2019 வரை இத்திட்டத்தில் 722 மில்லியன்அமெரிக்க டாலர் (சுமார்ரூ.3,949கோடி) முதலீடு செய்துள்ளது.   ஷ்வே திட்டத்திலிருந்து முதன்முறையாக ஜுலை 2013-ல் எரிவாயு பெறப்பட்டதோடு, டிசம்பர் 2014  முதல் நிலையான உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   2014-15 நிதியாண்டு முதல் இத்திட்டத்திலிருந்து லாபம் கிடைத்து வருகிறது.  எனவே, மியான்மர் நாட்டின் ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தில் ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிறுவனம், கூடுதலாக 121.27 மில்லியன்அமெரிக்க டாலர் (சுமார்ரூ.909கோடி);  1 டாலர் =ரூ.75) முதலீடு செய்வதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  

பலன்கள் :

இந்திய பொதுத்துறை நிறுவனங்கள், அண்டை நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்பது, கிழக்கை உற்றுநோக்குங்கள் என்ற இந்தியாவின் திட்டத்தின் படியும்,  இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புத் தேவைகளை மேலும் வலுப்படுத்தவும், அண்டை நாடுகளுடனான எரிசக்திப் பிணைப்புகளை அதிகரிக்கவும் உதவும்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply