இலங்கை, பருத்தித்துறைக்கு வடக்கே சுமார் 22 கடல் மைல் (சுமார் 40 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 6 சாக்குகளில் நிரம்பிய கேரள கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இலங்கை கடற்படை கைப்பற்றிய கஞ்சாவின் எடை 275 கிலோக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோய் சூழ்நிலை காரணமாக, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகு, பருத்தித்துறை போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பரிமாற்றக் கப்பல் மற்றும் கடத்தல்காரர்களைத் தேடும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகின்றன.
-என்.வசந்த ராகவன்.