வாசகரின் கேள்வி:
தமிழக சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும்? -தமிழக அரசியல் கூட்டணியில் ஏதாவது மாற்றம் நிகழுமா?
-ஆர்.மாதேஸ்வரன், செங்கல்பட்டு.
ஆசிரியரின் பதில்:
கொரோனா வைரஸ் பரவல் பேரிடரைக் காரணம் காட்டி, தமிழக சட்டசபை தேர்தல் 6 மாதம் தள்ளிப்போகும். வரும் டிசம்பர் (அல்லது) ஜனவரியில் தமிழக சட்டசபை கலைக்கப்படும். அதன்பிறகு சட்டசபை தேர்தல் நடக்கும் வரை, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறும்.
இதற்கிடையில், திமுக, அஇஅதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியில் பிளவு உண்டாகும். சில முக்கிய அரசியல் புள்ளிகள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படவும் வாய்ப்பு உண்டு.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
வணக்கத்திற்குரிய வாசகர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்..!
“கேள்விக்கு என்ன பதில்? “-என்ற தலைப்பில், நமது வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஊடகத்துறையில் 34 ஆண்டுகளுக்கு மேல் அனுபம் பெற்ற, நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்த, நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர், டாக்டர்.துரைபெஞ்சமின் அவர்கள், வெளிப்படையாகவும், உண்மையாகவும் பதில் அளிக்க இருக்கிறார். எனவே, மக்களின் மனநிலையை பிரதிபளிக்கும் வகையில், கருத்து ஆழமிக்க கேள்விகளை, கீழ்காணும் மின்னஞ்சல் ullatchithagaval@gmail.com (அல்லது) வாட்ஸ் அப் 9842414040 எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். வாசகர்கள் விரும்பினால் அவர்களின் படத்தையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.
-UTL MEDIA TEAM.