கேரள முதல்வர் அலுவலகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் (Member of Legislative Assemby (MLA) கூட நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது கொள்ளையர்களுக்கும், திருடர்களுக்கும் விலைபோய்விட்டது. தங்கம் கடத்தல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளின் மையப்பகுதியாக முதலமைச்சர் அலுவலகம் உள்ளது. முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் கேரள முதல்வர். ஊழல் செய்தது முதல்வர் தான். முதல்வர் கோரிக்கைக்கு ஏற்ப சிவசங்கரன் பல காரியங்களை செய்துள்ளார். முதல்வரை விசாரித்தால், கேள்வி கேட்டால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்.
சிவசங்கரன் என்பது வெறும் அறிகுறிகள்தான், ‘நோய்’ பினராயி விஜயன். முதலமைச்சர் அலுவலகத்தில் எல்லா ஊழலும், பினராயி விஜயனிடமிருந்துதான் தொடங்கியது. அவர்கள் செய்த ஊழல்கள் ஏராளம்; இன்னும் வெளிவர உள்ளன.
சிவசங்கரனை ஆரம்பத்திலிருந்தே முதலமைசசர் பினராயி விஜயன் நியாயப்படுத்துகிறார். ஜனநாயக கேரளாவில் இவ்வளவு கேவலப்பட்ட சூழ்நிலை இதுவரை வந்ததே இல்லை. வெட்கமிருந்தால் பினராயி விஜயன் பதவி விலகி வெளியே செல்ல வேண்டும்.
இவ்வாறு கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com