பாஜக மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசனும்,மேற்கு வங்க மாநில பாஜக பொதுச் செயலாளராக அமிதாவ சக்ரவர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வானதி சீனிவாசன்.

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசனை, பாஜக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா நியமனம் செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Amitava Chakravorty.

அதேபோல் மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக அமிதாவ சக்ரவர்த்தியை, பாஜக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா நியமனம் செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
UTL MEDIA TEAM

Leave a Reply