பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகளை கவனக்குறைவாக கொட்டுவதால் கடல் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பல்லுயிர் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, இலங்கை தீவைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள் அனைத்தையும் சுத்தம் செய்வதில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.
திருகோணமலை கோனேஸ்வரம் முதல் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனை வரை, கடற்கரையில் கவனக்குறைவாக பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகளை கொட்டுவதால் கடல் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருகோணமலை கடற்கரைப் பகுதியில் கடல் நீருக்கடியில் கிடந்த, மிதந்த பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் இலங்கை கடற்படை நீச்சல் குழுவைச் சேர்ந்த வீரர்கள் ஈடுப்பட்டனர். இதற்கு திருகோணமலை காவல்துறையினரும் உதவியாக இருந்தனர்.
‘கடலில் மூழ்கி முத்தெடுப்பதையும், மீன் பிடிப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்!-ஆனால், கடல் நீருக்கடியில் குப்பைகளைப் பொறுக்கி அப்புறப்படுத்துவது உண்மையிலுமே பாராட்டத்தக்கது.‘
-என்.வசந்த ராகவன்.
Great…..