தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் நிறைவுபெறுவதால், 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்!-இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.

இந்திய தேர்தல் ஆணையம்.

எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர்.

வே.நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.

பினராயி விஜயன், கேரள மாநில முதலமைச்சர்.

செல்வி. மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள முதலமைச்சர்.

சர்பானந்த சோனாவால், அசாம் மாநில முதலமைச்சர்.

தமிழ்நாடு (24.05.2021), புதுச்சேரி (08.06.2021), கேரளா (01.06.2021), மேற்கு வங்கம் (30.05.2021), அசாம் (31.05.2021) ஆகிய 5 மாநில சட்டசபை பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் நிறைவுபெறுவதால்,தேர்தல் நடத்தை விதிகளின்படி 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று, மேற்காணும் 5 மாநில அரசு தலைமைச் செயலாளர்களுக்கும், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் நிலையான கொள்கையை பின்பற்றி வருவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அந்த உத்தரவின் உண்மை நகலை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவுச் செய்துள்ளோம்.

Advisory-for-Transfer-Postig

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply