Allotment-of-Symbol-under-10B-Letter-to-CEO-dated-14.12.2020
தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ‘மோதிரம்’ சின்னமும், அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு ‘மின்சார கம்பம்’ சின்னமும், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு ‘பிரஷர் குக்கர்’ சின்னமும், எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் ‘பேட்டரி டார்ச்’ சின்னமும், சாமான்ய மக்கள் நல கட்சிக்கு ‘கைத்தடி’ சின்னமும், தேசியவாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ‘ஆப்பிள்’ சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னமும், மக்கள் சேவை கட்சிக்கு ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னமும், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் ‘பேட்டரி டார்ச்’ சின்னமும், இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னமும், புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னமும் ஒதுக்கீடு செய்து இருப்பது, தமிழக சட்டசபை தேர்தலிலும், புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் குழப்பத்தைதான் உருவாக்கும்; இது நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சிக்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும்.
இதற்கு “பிக் பாஸ்” என்ன செய்யப் போகிறார்?!
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com