புதுச்சேரி அமைச்சரும், வில்லியனூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான நமச்சிவாயம் மற்றும் ஊசுடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகியோர், இன்று (25.01.2021) தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கான ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் நேரில் அளித்தனர்.
இந்நிலையில், இன்று (25.01.2021) மாலை செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி, நமச்சிவாயம் பாஜகவில் சேருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.
இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஆ.நமச்சிவாயம், இதற்கு முன்பு அதாவது 30.09.2020 அன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்தியை கீழே பாருங்கள்…!
தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் நடக்குமோ?!
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
Ha.ha….. வேடிக்கை தான் சார்…..