குழந்தை தொழிலார்களை மீட்கும் காவல் துறையின் ‘ஆப்ரேஷன் ஸ்மைல்’ திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் குழந்தை தொழிலார்கள் மீட்கப்பட்டனர்.
ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் ரகு தலைமையில் ஏற்காடு போலீசார் கடந்த இரு தினங்களாக ஏற்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேலம், சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் முத்து (வயது 14) என்பவர், ஒண்டிக்கடை பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார்.
மேலும், சேலம், பழைய பஸ்நிலையம், நேரு நகர், வினோத் குமார் மகள் அபிநயா (வயது 15) வீட்டை விட்டு வெளியேறி, ஒண்டிக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
முத்து மற்றும் அபிநயா ஆகிய இருவரையும் மீட்டு, சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
பின்னர் அங்கு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, சிறார்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
–நே.நவீன் குமார்.
நல்ல நடவெடிக்கை…..