இமய நதிகளின் திடீர் வெள்ளப் பெருக்கால் மண்ணிற்குள் புதைந்தவர்களையும்; சுரங்கப்பாதையில் சிக்கியவர்களையும் மீட்கும் பணிகள் தீவிரம்!-உத்தராகண்ட் கள நிலவரம்.

தேவபிரயாகை.

ருத்திரப்பிரயாகை

கர்ணபிரயாகை

விஷ்ணுபிரயாகை.

நந்தபிரயாகை.

உத்தராகண்ட் மாநிலம், கார்வால் கோட்டம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வெடித்து, இரவு நேரத்தில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில், மக்கள் மண்ணிற்குள் சகதியில் புதைந்தும், தபோவன் சுரங்கப்பாதையில் சிக்கியும் உள்ளனர்.

காவல்துறை, தீயணைப்பு மீட்புத்துறை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸார் மீட்பு பணியில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

மண்ணிற்குள் சகதியில் புதைந்துள்ள மக்கள் சிலரை உயிரோடும், பலரை சடலமாகவும் மீட்டு வருகின்றனர். இந்த எதிர்பாராதப் பேரிடரில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று, மீட்புப் படையினரால் தொடர்ந்து எச்சரிக்கை மற்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கிற்கு காரணமான நதிகள்…!

இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை “ஜீவநதிகள்” என்று அழைக்கப்படுகிறது.

தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி, காவிரி, வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப நதிகளில் முக்கியமானவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில், கார்வால் கோட்டத்தில், சமோலி மாவட்டம் மற்றும் டெக்கிரி மாவட்டங்களில் “பஞ்ச பிரயாகை” என்ற பெயரில் கங்கை ஆற்றின் துணை ஆறுகளான பாகீரதி நதி, அலக்நந்தா நதி, மந்தாகினி நதி, பிந்தர் நதி மற்றும் தௌலி கங்கை ஆகிய 5 இமய நதிகள், தேவபிரயாகை, ருத்திரப்பிரயாகை, கர்ணபிரயாகை, விஷ்ணுபிரயாகை மற்றும் நந்தபிரயாகை ஆகிய இடங்களில் சங்கமம் ஆகிறது.

இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடை காலத்தில் பனிக்கட்டி உருகி இதுபோன்று திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படும். இச்சமயங்களில் திடீரென மண் சரிவும் ஏற்பட்டு அதிகளவில் உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதத்தை உண்டாக்கும். அதுபோன்ற இயற்கை பேரிடர்தான் இப்போது அங்கு ஏற்பட்டுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply