மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை அளித்த ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

அனகாபுத்தூர் – தரப்பாக்கம் இடையே அடையாற்றின் குறுக்கே இராணுவத் துறையின் ஆட்சேபனை காரணமாக 8 ஆண்டுகளாக தடைபட்டிருந்த மேம்பாலம் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தும், ஆலந்தூர் தொகுதி – 157-வது வட்டம், மணப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க இராணுவத்துறை அனுமதி வழங்க கோரியும், பரங்கிமலை கண்டோன்மெண்ட்- துளசிங்கபுரம் பேட்டரிக் லேனில் பட்டா நிலத்தில் 15 குடும்பங்கள் வசிக்கும் பகுதி இராணுவத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், ஒவ்வொரு முறையும் அவர்களின் வசிப்பிடத்திற்கு செல்ல இராணுவத் துறையின் அனுமதியை நாட உள்ளதால், அவர்களுக்கு நிரந்தர வழி (அல்லது) அப்பகுதி மக்கள் வாழ மாற்று இடம் வழங்க கோரியும், கண்டோன்மெண்ட் நகரியத்தில் இராணுவத் துறைக்கு சொந்தமான இடங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 40,000 பொதுமக்கள் வாழும் வசிப்பிடத்தை, இராணுவத்துறை அடிக்கடி காலி செய்ய கோரியும், அவர்கள் ஓலை குடிசைகளை மாற்றவும் அனுமதிக்காமல் துன்புறுத்துவதால், அவர்களுக்கு நிரந்தர தீர்வு (அல்லது) மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து, ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தா.மோ. அன்பரசன் கோரிக்கை மனுக்களை அளித்தார்.

அப்போது மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply